ஐரோப்பாவில் 23.56 லட்சம் பேருக்கு கொரோனா; 1.89 லட்சம் பேர் பலி| Coronavirus: Europe remains worst-hit | Dinamalar

ஐரோப்பாவில் 23.56 லட்சம் பேருக்கு கொரோனா; 1.89 லட்சம் பேர் பலி

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020
Share
Europe, coronavirus, europe coronavirus, covid19, ஐரோப்பா,கொரோனா

லண்டன்: ஐரோப்பாவில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.89 லட்சம் ஆக உயர்ந்தது. 23.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிக உயிர்பலி மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 13,109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 522 பேர் பலியாயினர். இதனையடுத்து ஐரோப்பாவில் மொத்த பாதிப்பு 23,56,910 ஆக உயர்ந்தது; மொத்த பலி 1,89,074 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 13,01,566 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.


latest tamil news



latest tamil news


அதிகபட்சமாக ரஷ்யாவில் 6,06,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 3,06,862 பேர், ஸ்பெயினில் 2,94,166 பேர், இத்தாலியில் 2,39,410 பேர், ஜெர்மனியில் 1,93,254 பேர், பிரான்சில் 1,61,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பும், உயிர்பலியும் தற்போது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X