தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 'கொரோனா'; மாநகராட்சி அதிகாரிகள் அலறல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 'கொரோனா'; மாநகராட்சி அதிகாரிகள் அலறல்

கோவை : 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள, இ.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து சென்றதால், அதிகாரிகள், ஊழியர்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். நேற்று கமிஷனர், துணை கமிஷனர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும், சளி, ரத்தம் மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

கோவையில், 'கொரோனா' பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இ.கம்யூ., வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்க பொருளாளர் சிவசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆகியோர், மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமாரை நேற்று முன்தினம் சந்தித்து, கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர்.

அதன்பின், அம்மூவரும், இ.எஸ்.ஐ., மருத்துவமனை சென்று, 'கொரோனா' பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது. இத்தகவல், மாநகராட்சி கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.உடனடியாக, அலுவலகத்தில் இருந்து அவர் வெளியேறி, கருத்தரங்கு அறையில் அமர்ந்து, அலுவல் பணிகளை கவனித்தார். மற்ற அலுவலர்கள் வெளியேற்றப்பட்டனர். கமிஷனர் அலுவலகம் முழுவதும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

எப்படி தொற்று ஏற்பட்டது?

கடந்த திங்கட்கிழமை, முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது, 'மாஜி' எம்.எல்.ஏ., ஆதரவாளர்களுடன் வந்திருந்தார்.சமூக இடைவெளியின்றி, ஏராளமானோர் கூட்டமாக நின்றிருந்தனர். அதனால், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மத்தியில், 'பீதி' ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது, 'மாஜி' எம்.எல்.ஏ., ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். சமூக இடைவெளியின்றி, ஏராளமானோர் கூட்டமாக நின்றிருந்தனர்.

கமிஷனருக்கு பரிசோதனை:

நேற்று மாலையே மாநகராட்சி மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, கமிஷனர், துணை கமிஷனர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் ரத்தம், சளி, மாதிரி எடுக்கப்பட்டது. இதர பிரிவு அலுவலர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மீதமுள்ள ஊழியர்களுக்கு, இன்று பரிசோதனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X