பொது செய்தி

தமிழ்நாடு

அன்னுார் செய்திகள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

அபராத வசூலில் பேரூராட்சி தீவிரம்

கோவில்பாளையம்: சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, முக கவசம் அணியாதவர்களிடமிருந்து, தலா, 100 ரூபாய் அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காத வணிக நிறுவனங்களிடமிருந்து அபராதமாக, 15 ஆயிரத்து 500 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. செயல் அலுவலர் ரவி சங்கர் தலைமையில் பணியாளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

மின்தடையால் தவிப்பு

அன்னூர்: பொகலூர் உதவி மின்வாரிய அலுவலகத்துக்கு கீழ் உள்ள குருக்கிளையம்பாளையம், மேகிணறு, பொகலூர் உள்ளிட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. லேசாக தூறல் விழுந்தால், இரண்டு மணி நேரம் மின் வி�யோகம் தடை செய்யப்படுகிறது. இதனால் 'ஆன்லைன்' வாயிலாக கல்வி கற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா பரவும் வாய்ப்பு

அன்னூர்: அன்னூர் பஸ் ஸ்டாண்டில், கோவை, சத்தி, மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசிக்கு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், பஸ் ஏறிச் செல்கின்றனர். பஸ்களில் தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, வெப்பம் பரிசோதிக்காமல், ஏற்றிச் செல்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

கீரணத்தத்தில் அபராதம் வசூல்

கோவில்பாளையம்: கீரணத்தம் ஊராட்சியில், முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் தலா, 100 ரூபாய் வசூல் செய்யப்பட்டு, இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. ஒரே நாளில், 21 பேரிடம், 2,100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், பி.டி.ஓ., கிராம நிர்வாக அலுவலர், பங்கேற்றனர்.

கணேசபுரத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

அன்னூர்: கணேசபுரத்தில், காட்டம்பட்டி ஊராட்சி சார்பில், ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. பி.டி.ஓ., மோகன், ஊராட்சித் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 11 பேரிடம், ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X