பொது செய்தி

தமிழ்நாடு

ஏர்ஹாரன்களால் பொதுமக்களை 'அலற' விடுவோரை அடக்கணும்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பேரூர் : சிறுவாணி ரோடு மற்றும் கிராமப்புற ரோடுகளில், விதிகளை மீறி வாகனங்களில், ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், செங்கல் சூளைகள் மற்றும் கட்டுமான பொருள் விற்பனையகங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது, ஊரடங்கு தளர்வு காரணமாக, கட்டுமான பணிகள் வேகமெடுத்துள்ளன.இதனால், எம் - சாண்ட், ஜல்லி கற்கள், செங்கல், சிமென்ட், மண் கொண்டு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அந்த வாகனங்கள் பலவற்றில், போக்குவரத்து விதிகளை மீறி, ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, லாரி, டிப்பர் லாரி, ஐஷர் வாகனங்களில், அதன் பயன்பாடு அதிகம். அதிக சப்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களால், இப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.'கொரோனா' பரவலுக்கு முன்பு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அதிக ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து, பறிமுதல் செய்து வந்தனர். தற்போது, அது போன்ற நடவடிக்கைகள் இல்லை.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை, அலறச் செய்யும் நிலையை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X