100 ஆட்டோக்களில் வீதி வீதியாக விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 ஆட்டோக்களில் வீதி வீதியாக விழிப்புணர்வு

Added : ஜூன் 25, 2020
Share

கோவை : கோவையில், 'கொரோனா' தொற்று படுவேகமாக பரவி வருகிறது. சமூக பரவலாகி விடுமோ என்கிற அச்சம், சுகாதாரத் துறையினர் மத்தியில் இருக்கிறது. அதேநேரம், மார்க்கெட்டுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை; சிலர் முக கவசம் அணிவதில்லை; கைகளை சோப்பு போட்டு கழுவுவதில்லை. நோய் தொற்று நமக்கெல்லாம் வராது என்கிற, அலட்சியம் பலரிடம் இருக்கிறது.இதுதொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வார்டுக்கு ஒன்று வீதம், 100 ஆட்டோக்கள் மூலம் வீதி வீதியாகச் சென்று, ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.இதை, மத்திய மண்டல அலுவலகத்தில், மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், துணை கமிஷனர் மதுராந்தகி ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர்.

விழிப்புணர்வு வாசகங்களுடன், நான்கு வாகனங்கள் இயக்கமும் துவக்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகளில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கும் பணியும் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X