தமிழ்நாடு

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இன்று ஜாக்கிரதை! சமூக இடைவெளி மிகவும் முக்கியம்!

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இன்று ஜாக்கிரதை! சமூக இடைவெளி மிகவும் முக்கியம்!

கோவை மாவட்டத்தில், தற்போது கொரோனா பரவலின் வேகமும், வீரியமும் அதிகரித்துள்ளது. ஆனால், ஆளுங்கட்சி, எதிர்கட்சி பிரதிநிதிகள் என யாராக இருப்பினும், நிவாரண பொருட்கள், ரேஷன் பொருட்கள் வினியோகம், கிருமிநாசினி தெளிப்பு, ஆய்வகம் திறப்பு, ஸ்மார்ட் சிட்டி பணிகள் துவக்கம் என... அனைத்துக்கும் விழா நடத்தும் வழக்கம் உள்ளது.

வைரசுக்கு தெரியாது!

'அப்படி இருக்கணும்...இப்படி இருக்கணும்' என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு, அரசு நிகழ்வுகள் அனைத்திலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், இருப்பது ஏன் என்பது தெரியவில்லை.கொரோனா வைரசுக்கு, 'இவர் அமைச்சர், இவர் எம்.எல்.ஏ., இவர் கலெக்டர், இவர் கமிஷனர்' என யாரையும் தெரியாது.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு, கொரோனா தொற்று சமீபகாலமாக உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக, அரசியல் கட்சியினர் பலர் சுத்தமாக, விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றனர். போட்டி போட்டுக் கொண்டு, புகைப்படங்களுக்கு நெருக்கியடித்து போஸ் கொடுக்கும் இவர்கள், நிலைமையின் விபரீதத்தை இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.இவர்கள், தமிழக முதல்வர் இன்று பங்கேற்கும் கூட்டங்களில், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அனைவரும், கவனமாக நடந்து கொண்டு, கொரோனாவை துரத்தியடிக்க வேண்டும்

.மாவட்ட நிர்வாகம் கவனம்

தேவையற்ற கூட்டங்களை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம். முதல்வருடன் சென்னையிலிருந்து அவரது பாதுகாப்பு அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் பலரும் வரும் நிலையில், தயக்கமின்றி அவர்களுக்கும் உரிய பரிசோதனைகள் செய்வது அவசியம். அவர்களுடன், உள்ளூர் கட்சியினர், அதிகாரிகள் உரிய சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

இது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முதல்வர் பங்கேற்கும் நிகழ்வில் அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சமூக விலகல் காரணமாக, துவக்கவிழா நிகழ்ச்சி அனைத்தும், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக, நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள், தனிநபர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படாது. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அனைவரும், தெர்மல் ஸ்கேனர் வாயிலாக, பரிசோதிக்கப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்' என்றார்.இன்று பார்க்கத்தானே போகிறோம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X