பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசனம் அமைக்க தயாரா; மத்திய அரசு தருகிறது மானியம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சூலூர் : இரட்டிப்பு உற்பத்தியும், மும்மடங்கு வருமானமும் கிடைக்க, மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சேருமாறு, தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி கூறியுள்ளதாவது:பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சேரும் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால், இரு மடங்கு உற்பத்தியும், மூன்று மடங்கு வருமானமும் கிடைக்கிறது.இரண்டரை ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ரூ.1.13 லட்சமும், இரண்டு ஏக்கர் உள்ளவர்களுக்கு, ரூ. 89,682 ம், ஒரு ஏக்கருள்ள விவசாயிக்கு, ரூ. 42,781 வழங்கப்படுகிறது.

மோட்டார் வாங்க, ரூ.15 ஆயிரமும், தொட்டி கட்ட, ரூ. 40 ஆயிரமும், குழாய் வாங்க, ரூ.10 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.சூலூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், 97516 99850 என்ற மொபைல் போன் எண்ணில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரையும், 99442 64889 என்ற எண்ணில் துணை அலுவலரையும், 87786 64997 என்ற எண்ணில் உதவி அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X