பொது செய்தி

தமிழ்நாடு

பத்திர அலுவலகத்தில் காணோம் 'பத்திரம்'

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கோவை : சமூக இடைவெளி பின்பற்றாமல், காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று பத்திரங்கள் பதியப்பட்டன.

கோவையில், 17 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இருக்கின்றன. 'கொரோனா' பரவல் காரணமாக, பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற, அரசு அறிவுறுத்தி இருப்பதால், பத்திரப் பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது.நேற்று சதுர்த்தி என்பதால், பத்திரங்கள் பதிய, ஏராளமானோர் அலுவலகங்களுக்கு வந்தனர். 'சர்வர்' மக்கர் செய்ததால், பத்திரம் பதிய, 4 மணி நேரம் தாமதமானது.

பொதுமக்கள் அலுவலகத்திலேயே, வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சராசரியாக, சில அலுவலகங்களில், 60, சிலவற்றில், 80 பத்திரங்கள் பதியப்பட்டதால், கூட்டம் அதிகமாக காணப்பட்டது.காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், சமூக இடைவெளி பின்பற்றாமல், பத்திரங்கள் பதியப்பட்டன. பதிவுக்கு வந்திருந்த மக்களில் சிலர் முக கவசம் அணியவில்லை.

அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளாமல், பதிவு பணியை தொடர்ந்தனர். அதேநேரம், பெரியநாயக்கன் பாளையம் அலுவலகத்தில், போதிய இடைவெளியுடன் இருக்கை வசதி, கை கழுவ வசதி செய்யப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X