பொது செய்தி

தமிழ்நாடு

'உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு'

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கோவை : உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கோவையில், நிருபர்களிடம் பேரமைப்பின் கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:தூத்துக்குடி சாத்தான்குளத்தில், போலீசார் விசாரணை என்ற பெயரில் இருவரையும் அழைத்து சென்று கடுமையாக தாக்கியதால் தான், இருவரும் உயிரிழந்தனர். மனிதாபிமானமற்ற முறையில், நடந்து கொண்ட போலீசார் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும்.

பிரேதப்பரிசோதனை அறிக்கையில், குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால், கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என, டி.ஜி.பி., கூறியுள்ளார்.பிரேதப்பரிசோதனை செய்யும் போது, அரசு மருத்துவர்களுடன் வணிக தரப்பினர் இருக்க வேண்டும். நீதிபதி முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X