பொது செய்தி

தமிழ்நாடு

சி.எம்.சி., காலனி மக்களுக்கு வீடு; உத்தரவு அட்டை வினியோகம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கோவை : உக்கடம் பாலம் பணிக்காக அகற்றப்படும் துாய்மை பணியாளர்களின் வீடுகளுக்கு மாற்றாக, அதே பகுதியில் மீண்டும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுப்பதற்கான உத்தரவு, நேற்று வழங்கப்பட்டது.

உக்கடம் மேம்பாலம் பணிக்காக, சி.எம்.சி., காலனியில் வசிக்கும் துாய்மை பணியாளர்களது, வீடுகளை காலி செய்ய வேண்டியுள்ளது. முதலில் மறுப்பு தெரிவித்த அவர்கள், அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக உறுதியளித்ததால், ஒத்துக் கொண்டனர்.இதில், 492 நிரந்தர குடியிருப்புகளுக்கு அதே பகுதியில் வீடு ஒதுக்கப்படும். 245 கூடுதல் வீடுகளுக்கு, உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகம் அல்லது, வெள்ளலுார் குடியிருப்பில், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு பெறலாம். இது தவிர, 296 வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கும், புதிதாக வீடு ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளின் புகைப்படத்துடன் கூடிய, உத்தரவு வழங்கும் நிகழ்வு, கெம்பட்டி காலனி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் தலைமை வகித்தார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன், பயனாளிகளுக்கு உத்தரவு அட்டைகளை வழங்கினார்.

அடமானம் கூடாது!

பயனாளிகளுக்கு வழங்கிய உத்தரவில், 'பயனாளிகளுக்கு மட்டுமே வீடு ஒதுக்கப்படும். உத்தரவை அடமானம் வைக்கக் கூடாது; விற்கக்கூடாது; தொலைத்து விடக்கூடாது. உத்தரவில் உள்ள புகைப்படத்தில் இருப்பவர்களுக்கே ஒதுக்கீடு வழங்கப்படும். வேறு நபர்கள் வைத்திருந்தால், உத்தரவு ரத்து செய்யப்படும்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X