சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தாத டிரைவர் மீது வழக்கு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கோவை : கோவை காளப்பட்டி பிரிவு நேரு நகரை சேர்ந்தவர் முகமது அஷ்ரப் அலி, 30; டிரைவர். கடந்த வாரம் பெங்களூரு சென்று விட்டு, 17ம் தேதி கோவை வந்தார். சுகாதார துறை அதிகாரிகள், அவரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். சுகாதார துறை அதிகாரிகள் முகமது அஷ்ரப் அலியின் உடல்நிலை குறித்து அறிய,நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர்.

ஆனால், அவர் வீட்டில் இல்லை. அதிர்ச்சியடைந்த சுகாதார துறை அதிகாரிகள், அவரது வீட்டருகே காத்திருந்தனர். பல மணி நேரம் கழித்து வந்த அவரிடம், வெளியே சென்றது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கேட்டனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சுகாதார துறை அலுவலர் வெங்கடாசலம், பீளமேடு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X