அந்தரத்தில் நிற்கும் எச்.ஐ.எச்.எஸ்., காலனி பாலம்; கோவை வரும் தமிழக முதல்வர் தீர்வு காண்பாரா?| Dinamalar

தமிழ்நாடு

அந்தரத்தில் நிற்கும் எச்.ஐ.எச்.எஸ்., காலனி பாலம்; கோவை வரும் தமிழக முதல்வர் தீர்வு காண்பாரா?

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
கோவை : கோவை, எச்.ஐ.எச்.எஸ்., காலனியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி, ஏழரை ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்காததால், அந்தரத்தில் நிற்கிறது. கோவைக்கு இன்று வரும் தமிழக முதல்வர் பழனிசாமி, இப்பாலம் பிரச்னையில் தலையிட்டு, தீர்வு காண வேண்டுமென, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த, தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கோவை காந்திபுரம், ஆவராம்பாளையம், பீளமேடு, தண்ணீர் பந்தல்,
 அந்தரத்தில் நிற்கும் எச்.ஐ.எச்.எஸ்., காலனி பாலம்; கோவை வரும் தமிழக முதல்வர் தீர்வு காண்பாரா?

கோவை : கோவை, எச்.ஐ.எச்.எஸ்., காலனியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி, ஏழரை ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்காததால், அந்தரத்தில் நிற்கிறது. கோவைக்கு இன்று வரும் தமிழக முதல்வர் பழனிசாமி, இப்பாலம் பிரச்னையில் தலையிட்டு, தீர்வு காண வேண்டுமென, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த, தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கோவை காந்திபுரம், ஆவராம்பாளையம், பீளமேடு, தண்ணீர் பந்தல், நீலிக்கோணாம்பாளையம், எச்.ஐ.எச்.எஸ்., காலனி, ஒண்டிபுதுார், நஞ்சுண்டாபுரம் ஆகிய இடங்களில் உயர் மட்ட பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதில், காந்திபுரம், ஒண்டிபுதுார், நஞ்சுண்டாபுரம், பீளமேடு ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு விட்டன.

ஆவராம்பாளையத்தில் கட்டுமான பணி நடக்கிறது.ரூ.21.16 கோடியில், எச்.ஐ.எச்.எஸ்., காலனியில், 27 துாண்களுடன் ரயில்வே உயர்மட்ட பாலம் கட்டும் பணியை, 2013, ஜன., 30ல், மாநில நெடுஞ்சாலைத்துறை துவக்கியது.30 அடி அகலமுள்ள அந்த ரோட்டில், அணுகு சாலைக்கு இடம் ஒதுக்காமல், 30 அடி அகலத்துக்கு பாலம் கட்ட ஆரம்பித்ததால், அப்பகுதி பொதுமக்கள், கோர்ட்டுக்கு சென்றனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, ஆறாவது துாண் வரை, 600 மீட்டர் துாரத்துக்கு அணுகு சாலை அமைத்த பின், பாலம் பணியை தொடர வேண்டும். இழப்பீடு வழங்கிய பிறகே, நிலம் கையகப்படுத்த வேண்டும். அதுவரை கட்டுமான பணியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.2018, டிச., 31ல், அமைச்சர் வேலுமணி முன்னிலையில், நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. இழப்பீடு பெற்றுக்கொள்ள நில உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்தனர்.

நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தொடர் நடவடிக்கை எடுக்காததால், ஏழரை ஆண்டுகளாக, அப்பாலம் அந்தரத்தில் நிற்கிறது.இன்று கோவைக்கு வரும் தமிழக முதல்வர் பழனிசாமி, பல்வேறு புதிய பணிகளை துவக்கி வைக்கிறார். எச்.ஐ.எச்.எஸ்., காலனி பாலம் கட்டுவதற்கு உள்ள பிரச்னையில் தலையிட்டு, கட்டுமான பணியை மீண்டும் துவக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X