பொது செய்தி

இந்தியா

ஏழைகள் வேலைவாய்ப்பு திட்டம் : தனி அதிகாரிகள் நியமனம்

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
employment scheme, migrants, coronavirus lockdown, ஏழைகள், வேலைவாய்ப்பு திட்டம்,தனி அதிகாரிகள், நியமனம்

புதுடில்லி : ஆறு மாநிலங்களில் உள்ள, 116 மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ள, ஏழைகள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, 116 தனி அதிகாரிகளை, மத்திய அரசு நியமித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுதும், மார்ச், 25ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில தளர்வுகளுடன், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால், புலம்பெயர் தொழிலாளர்கள், வேலையில்லாமல் பாதிக்கப்பட்டு, சொந்த ஊர் திரும்பினர்.இந்நிலையில், கிராமப்புற மக்களுக்கும், சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், வாழ்வாதாரத்தை வழங்கி, அவர்கள் நிலையை மேம்படுத்த, 'கரீப் கல்யாண் ரோஜ்ஹார் அபியான்' எனப்படும், ஏழைகள் நலனுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது.முதல் கட்டமாக, 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு மாநிலங்களில் உள்ள, 116 மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில், கடந்த, 20ம் தேதி, இத்திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். புலம்பெயர் தொழிலாளர்களில், மூன்றில் இரண்டு பங்கு பேர் வசிக்கும், பீஹார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள, 116 மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒரு தனி அதிகாரியை மத்திய அரசு நியமித்துள்ளது. இணை செயலர் அந்தஸ்தில் பணியாற்றி வந்த, 116 அதிகாரிகள், தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.'இந்த தனி அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி, பணிகளை செயல்படுத்துவர்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
25-ஜூன்-202017:22:18 IST Report Abuse
sankaseshan குற்றம்சொல்ல ஓடி வாருங்கள்
Rate this:
Cancel
venkatasubramanian - madurai,இந்தியா
25-ஜூன்-202013:14:25 IST Report Abuse
venkatasubramanian தமிழ்நாடு சேர்க்கப்படவில்லை
Rate this:
Cancel
25-ஜூன்-202011:36:38 IST Report Abuse
ஆப்பு குடுக்கறதுதான் குடுக்கறீங்க. அரசு வேலையாப் போட்டு குடுத்துருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X