ராணுவ நடவடிக்கை தள்ளி வைத்த வட கொரியா

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சியோல் : தென் கொரிய எல்லையில் நுழைந்து, ராணுவ பயிற்சியை மேற்கொள்ளவிருந்த வட கொரியா, திடீரென அத்திட்டத்தை தள்ளி வைத்துள்ளது.

தென் கொரியா, பலுான்கள் மூலம் தனக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வீசுவதாக, வட கொரியா குற்றஞ்சாட்டி வருகிறது. இதையடுத்து, கடந்த வாரம், தென் கொரிய எல்லைக்குள் அமைந்திருந்த, இரு நாடுகளின் தகவல் உதவி மையத்தை, வட கொரியா குண்டு வைத்து தகர்த்தது.அத்துடன், எல்லையோரம் ராணுவத்தை அனுப்பியது. மேலும், தென் கொரியாவிற்குள் நுழைந்து, மீண்டும் ராணுவ பயிற்சி துவங்கப் போவதாகவும் அறிவித்தது.

இந்நிலையில்,நேற்று முன்தினம் வட கொரிய அதிபர், கிம் ஜங் உன் தலைமையில், மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது. அப்போது, தென் கொரியாவிற்குள் நுழைந்து ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதை தள்ளி வைக்க, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடகொரியாவின் இந்த முடிவு, தற்போது இரு நாடுகள் இடையிலான பதற்றத்தை தணித்துஉள்ளது. அத்துடன், இரு நாடுகளின், 70வது ஆண்டு போர் நினைவு விழா நிகழ்ச்சிகள் சுமுகமாக நடக்கவும் துணை புரிந்து உள்ளது.

இதனிடையே, கொரோனா பாதிப்பு ஏதுமில்லை என கூறும் வட கொரியா, கிம் ஜங் உன் கூட்டத்தை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடத்தியது குறித்து, அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X