பொது செய்தி

தமிழ்நாடு

கருப்பூர் தனிமை மையத்தில் மேலும் 150 படுக்கை தயார்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஓமலூர்: அறிகுறி இல்லாமல் பாதிக்கப்படுவோரை தங்க வைக்க, கருப்பூரில், மேலும், 150 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சேலம் வருவோரை தனிமைப்படுத்தும் மையமாக, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி, பெரியார் பல்கலை விடுதிகள் உள்ளன. அங்கு, 200 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது, பல இடங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், தீவிரமாக பாதிக்கப்பட்டோரை கண்காணிப்பதில் சிரமம் ஏற்படும். அதனால், அறிகுறி இல்லாமல் பாதிக்கப்படுவோரை தங்கவைத்து சிகிச்சையளிக்க, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக, பொறியியல் கல்லூரி, பெரியார் பல்கலை விடுதிகளில், மேலும், 150 படுக்கை வசதிகள் தயார் செய்துள்ளனர். ஒரு டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் என, சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X