பொது செய்தி

தமிழ்நாடு

போராளிகளுக்கு நன்றி தெரிவிக்க சிறப்பு தபால் அட்டை வெளியீடு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சேலம்: கொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவிக்க, சிறப்பு தபால் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் முதல், நாடு முழுதும் கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில், தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், சுகாதார பணியாளர், மருத்துவ அலுவலர், செவிலியர், தபால் அலுவலர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களை கவுரவிக்க, நன்றி சொல்ல, தபால்துறை சார்பில், சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டுள்ளது. அதை, கோவை அஞ்சல் அலுவலகத்திலிருந்து பெற்ற, சேலம் பாராமஹால் நாணயவியல், தபால் தலையியல் சங்க இயக்குனர் சுல்தான் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் போராளிகளுக்கு நன்றி தெரிவிப்பது நம் கடமை. அவர்களை பெருமைப்படுத்த, தபால் அட்டை வெளியிடப்பட்டுள்ளது. இதில், தூய்மை பணியாளர் உள்ளிட்ட போராளிகளின் படங்கள், கொரோனா விழிப்புணர்வு வாசகம், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றை அச்சடித்து, வண்ண தபால் அட்டைகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஆறு ரூபாய் தபால்தலை ஒட்டப்பட்டுள்ளதால், நமக்கு தெரிந்த போராளிக்கு, நன்றி தெரிவிக்கும் அட்டையாக பெயர், முகவரி எழுதி அனுப்ப முடியும். குறைந்த அளவே அச்சிடப்பட்டுள்ளதால், சிறப்பு வகுப்பு நடத்தும்போது, விழிப்புணர்வு ஏற்படுத்த, பாராமஹால் நாணயவியல், தபால் தலையியல் சங்கம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X