பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் அங்கக சான்று: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சேலம்: இயற்கை விவசாயத்தை மேம்படுத்த, மத்திய அரசின் அங்கக சான்று பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை விவசாயம் மூலம் செய்யும் உணவுப்பயிர், பழம், காய்கறிக்கு நல்ல விலை கிடைப்பதோடு, மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு குறைகிறது. சந்தையில் விற்க, இயற்கை சான்று பெறறால், விற்பனை வாய்ப்பு கணிசமாக உயரும். அதனால், இயற்கை முறை வேளாண், தோட்டக்கலை உணவு பொருளுக்கு, மத்திய அரசால் அங்கீகாரம் வழங்கி, சான்றளிக்கப்படும் முறையே, அங்கக சான்றளிப்பு. உற்பத்தி, பதப்படுத்தும் முறையில் விளைபொருட்களின் தரத்தை நிர்ணயித்து, வழிமுறை ஏற்படுத்தி, உறுதியாக்கம் செய்து, அங்கக சான்று வழங்கப்படுகிறது. அச்சான்று பெற, தனிநபர், குழு, பெரு நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளலாம். வணிகம், ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். விண்ணப்ப படிவம், ஒப்பந்த படிவம், ஆண்டு பயிர் திட்டம், சிட்டா நகல், புல வரைபடம், நீர் -மண் பரிசோதனை விபரம் ஆகியவற்றுடன், உரிய பதிவு கட்டணத்தை, வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தகவலுக்கு, கலெக்டர் அலுவலக அறை எண், 403ல், உதவி இயக்குனர், விதைச்சான்று, அங்கக சான்றுத்துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும், 94433 - 83304, 99524 - 13388 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பயிர் காப்பீடு: மகுடஞ்சாவடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மணிமேகலாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: மகுடஞ்சாவடி வட்டார விவசாயிகள், தங்கள் விளைநிலத்தில் உள்ள நெல்(கார்), மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, பருத்தி, நிலக்கடலை, வெண்டை, வெங்காயம், தக்காளி, மஞ்சள் பயிர்களுக்கு ஜூலை, 31 வரை; ராகி, சோளம், சாமை பயிர்களுக்கு ஆக., 16; துவரைக்கு செப்., 15 வரை, பயிர் காப்பீடு செய்யலாம். பிரீமிய தொகை ஏக்கருக்கு, நெல்லுக்கு, 620 ரூபாய், மக்காச்சோளம், 302, பயறு வகை பயிர், 256, பருத்தி, 621, நிலக்கடலை, 381, ராகி, 177, சோளம், 159, சாமை, 158, வாழை, 3,230, வெண்டை, 1,168, வெங்காயம், 1,828, மரவள்ளி, 2,100, தக்காளி, 920, மஞ்சள், 3,685 ரூபாய் செலுத்த வேண்டும். விபரம் பெற, மகுடஞ்சாவடி வேளாண் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். அதேபோல், சங்ககிரி வட்டார விவசாயிகளுக்கு, அதன் வேளாண் உதவி இயக்குனர் தேசிங்குராஜா(பொ), அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X