பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவருக்கு ஊக்கத்தொகை: வங்கி கணக்கு விபரம் பதிய உத்தரவு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சேலம்: அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் ஊக்கத்தொகை பெற, வங்கி கணக்கு விபரங்களை, உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, தலா, 2,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2019 - 20 கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த மாணவர்களில், 5 லட்சத்து 35 ஆயிரத்து, 82 மாணவ, மாணவியர் தகுதி பெற்றனர். அவர்களின், 8, 10, பிளஸ் 2 படித்த பள்ளிகள், வங்கி கணக்கு விபரங்களை, எமிஸ் எனும் மேலாண் கல்வித்தொகுப்பு இணையதளத்தில் பதிய வேண்டும். ஆனால், கடந்த கல்வியாண்டில் முடித்தவர்களில், ஒரு லட்சத்து, 69 ஆயிரத்து, 108 மாணவர்களின் விபரம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள, மூன்று லட்சத்து, 65 ஆயிரத்து, 974 பேரின் வங்கி கணக்கு விபரம் சேர்க்கப்படவில்லை. சேலம் மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 88 பேரில், 8,420 பேரின் விபரங்கள் மட்டும் பதியப்பட்டுள்ளன. இதனால், ஊக்கத்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அந்த விபரங்களை சேகரித்து, உடனே பதிய, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X