பொது செய்தி

தமிழ்நாடு

பச்சை பட்டாணி வரத்து சரிவால் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்வு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சேலம்: வெளிநாடுகளில் இருந்து வரும் பச்சை பட்டாணி வரத்து சரிந்ததால், அதன் விலை, கிலோவுக்கு, 20 ரூபாய் உயர்ந்தது.
இந்தியாவின் பச்சை பட்டாணி தேவையை, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா நாடுகள், 80 சதவீதம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள், 20 சதவீதம் பூர்த்தி செய்கின்றன. கொரோனா பரவலால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பச்சை பட்டாணி இறக்குமதி செய்வதை, மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. அதேநேரம், வடமாநிலங்களிலும் பச்சை பட்டாணி இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால், தமிழக மார்க்கெட்டுகளுக்கு, கடந்த மாதம் வரை, வாரம், 120 லாரிகளில் வந்துகொண்டிருந்த பச்சை பட்டாணி, 70 லாரிகளாக குறைந்துவிட்டது. இதனால், அதன் விலை, நேற்று முன்தினம் கிலோவுக்கு, 20 ரூபாய் உயர்ந்தது. அதன்படி, முதல் ரகம் கிலோ, 180க்கு விற்றது, 200 ரூபாய், இரண்டாம் ரகம், 160க்கு விற்றது, 180 ரூபாய், மூன்றாம் ரகம், 150க்கு விற்றது, 170 ரூபாயாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X