இணையம் வழியாக ஜமாபந்தி மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இணையம் வழியாக ஜமாபந்தி மனு

Added : ஜூன் 25, 2020
Share

சேலம்: ஜமாபந்தி மனுவை, இ - சேவை மையம், இணையம் வழியாக அனுப்பி பயன்பெறலாம். இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனால், 2019 - 20க்குரிய ஜமாபந்தி நடக்காது. மக்கள், தங்கள் குறைகளை, மனு மூலம், சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாக வழங்குவதை தவிர்த்து, வரும், 29 முதல், ஜூலை, 15 வரை, இ - சேவை மையங்கள், இணையம் வழியாக விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X