பொது செய்தி

தமிழ்நாடு

இரை தேடி வயலுக்கு வரும் மயில்களுக்கு ஆபத்து

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

வீரபாண்டி: சேலம், கஞ்சமலையில், 300க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளன. அங்கு, போதிய இரை கிடைப்பதில்லை. இதனால், அடிவாரத்தில் உள்ள வயல்களுக்கு, இரை தேடி வருகின்றன. தொடக்கத்தில், பயிர் சாகுபடி செய்த விவசாயிகள், மயில்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், தற்போது கூட்டமாக வந்து, விளைந்த பயிர்களை தின்று விடுவதால், மகசூல் பாதிக்கப்பட்டு, தற்போது விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக, பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல், மே முதல் வாரம் வரை, இரை தேடி வந்த மயில்கள், தற்போதும் வயல்களுக்கு படையெடுக்கின்றன. மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிலர் இறைச்சி, தோகைக்கு வேட்டையாடுகின்றனர். சில விவசாயிகள், மயில்கள் கூட்டத்தை விரட்ட, விஷம் கலந்த உணவை தூவுகின்றனர். அதை சாப்பிட்டபின் மயில்கள் இறக்க, யாருக்கும் தெரியாமல், குழி தோண்டி புதைத்துவிடுகின்றனர். தேசிய பறவையான மயில்களை, வேட்டைக்காரர்களிடம் இருந்து காக்க, அதிகாரிகள் முன் வர வேண்டும். மேலும், கஞ்சமலையிலேயே மயில்களுக்கு உணவு கிடைக்க, பழ மரங்கள், மானாவாரியாக வளரும் சிறு தானியங்களை வளர்க்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அப்பகுதி மக்களிடம் மயில்களை காக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X