பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக-கர்நாடக எல்லையில் கொரோனா பரிசோதனை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் அருகே, தமிழக - கர்நாடக எல்லையில், பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான, பண்ணாரியில் காவல்துறை, வட்டார போக்குவரத்து மற்றும் வனத்துறை சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளன. இங்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து, தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகின்றன. பின்னர், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு, முறையாக இ-பாஸ் குறித்து ஆய்வு செய்த பின்னரே, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வருவோருக்கு, கட்டாயமாக கொரோனா பரிசோதனைக்காக, மாதிரிகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வருவோர் அனைவருக்கும், சளி மாதிரி எடுக்கும் பணியில், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X