பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் உட்பட நால்வருக்கு கொரோனா தொற்று

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், போலீஸ்காரர் உட்பட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தினமும், தொற்று உள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலையில், சுகாதார துறையினர் வெளியிட்ட பட்டியலில், கொடுமுடியை சேர்ந்த, 23 வயது பெண், 45 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, சொந்த ஊர் வந்த உறவினர் மூலம், இவர்கள் இருவருக்கும் தொற்று ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சி, திருநகர் காலனியை சேர்ந்த, 55 வயது பெண்ணுக்கு தொற்று உறுதியானது. இவரது கணவர் மூலம், இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் போலீசாக பணி செய்யும், 24 வயது ஆண், தனது சொந்த ஊரான பவானி வந்த நிலையில், சோதனை சாவடியில் பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதியானது. இவர்களால் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 89 ஆக உயர்ந்தது. இவர்களில், 16 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும், 270 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மொத்தம், 3,433 பேர் தனிமையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X