பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணம் வழங்குவதாக தாலுகா அலுவலகத்தில் குவியும் மக்கள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

செங்கம்: கொரோனா நிவாரணமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக, மக்களிடையே தவறான தகவல் பரவிய நிலையில், செங்கம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் மக்கள் குவிகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில், 44 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, தமிழக அரசு, 1,000 ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கியது. இதேபோல், பிரதமர் நிவாரண நிதியாக, 10 ஆயிரம் வழங்கப்படுகிறது, அதற்கு, செங்கம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற, தவறான தகவல் மக்களிடையே பரவியது. இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக நாள்தோறும், நூற்றுக்கணக்கானோர், கொரோனா நிவாரண நிதி வழங்கக்கேட்டு விண்ணப்பத்துடன், தாலுகா அலுவலகத்தில் குவியத்தொடங்கி உள்ளனர். அங்குள்ள அதிகாரிகள், கொரோனா நிவாரண நிதி எதுவும் வழங்கவில்லை, வந்த தகவல் வதந்தி எனக்கூறியும், அதை ஏற்க மறுத்த மக்கள், அதிகாரிகளிடம், 'நிவாரண பணத்தை நீங்களே சுருட்ட பார்க்கிறீர்களா' என, வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல், விண்ணப்பத்துடன் வரும் மக்களை பார்த்தால், தலைதெறிக்க ஓட்டமெடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X