22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஜூன் 25, 2020
Share

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே, கர்நாடகாவுக்கு கடத்திய, 22 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையிலிருந்து வருவோரை தடுக்க, வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பத்தில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, 24 மணி நேரம் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சென்னையிலிருந்து வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்?போது அதிலிருந்த நான்கு பேர் தப்பியோடினர். லாரியில் நடத்திய சோதனையில், 450 மூட்டைகளில், 22 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதை, சென்னையிலிருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு கடத்திச்செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. போலீசார், லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, தப்பியோடிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X