பொது செய்தி

தமிழ்நாடு

அரூர் முக்கிய சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

அரூர்: அரூரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முக்கிய இடங்களில், கொரோனா உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, கடந்த மார்ச், 24 முதல், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தளர்வுகளுடன், ஐந்தாம் கட்டமாக வரும், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், கொரோனா வைரஸ் குறித்து, சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரூரில், சில நாட்களுக்கு முன், தலைமையாசிரியை உள்பட, 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கச்சேரிமேடு, நான்குரோடு, போலீஸ் ஸ்டேஷன் வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், தன்னார்வ இளைஞர்கள் சாலையின் மையப்பகுதியில் கொரோனா உருவ பொம்மையை வைத்துள்ளனர். அதில், 'விலகி இரு, வீட்டில் இரு, விழித்திரு' என்ற விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X