பொது செய்தி

தமிழ்நாடு

விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்ல டிஜிபி தடை

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
டிஜிபி, திரிபாதி, போலீஸ், சுற்றறிக்கை, விசாரணை கைதிகள்,  கொரோனா, பரிசோதனை, Tamil Nadu DGP, arrest, remand, guidelines, Covid-19 spread, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu

சென்னை: விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று விசாரிக்காமல், தடுப்பு மையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் போலீசாருக்கும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளத்தில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், இரண்டு எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விசாரணை கைதிகளை காவலில் விசாரிக்கும் போது போலீசார் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். விசாரணை காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா கண்டறியப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று விசாரணை செய்ய கூடாது. தடுப்பு காவல் மையங்களுக்கு அழைத்து சென்றே விசாரணை நடத்த வேண்டும்.


latest tamil news


ஜாமினில் வரும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை உடனடியாக போலீஸ் ஜாமின் தர வேண்டும். ஜாமினில் வர முடியாத விசாரணை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையுடன், கொரோனா பரிசோதனை செய்வது அவசியம். கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த தனிக்கட்டடம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
26-ஜூன்-202005:33:00 IST Report Abuse
natarajan s இதில் ஒரு நடைமுறை சிக்கல் உள்ளது. இது காவல் நிலைய Custodial death இல்லை. அவர்கள் இருவரும் நீதிபதி முன் ஆஜர் படுத்த பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்ட பிறகு உயிர் இழந்து விட்டார்கள் . சௌகரியமாக போலீஸ் நாங்கள் நல்ல முறையில் ஆஜர் செய்து சிறையில் அடைத்து விட்டோம் , சிறையில் என்ன நடந்தது என்று தெரியாது என்று கூறி பழியை சிறை நிர்வாகத்தின் மீது போட்டு விடுவார்கள்.இரண்டு நாட்கள் சென்ற பின் உயிர் இழப்பு , இதில் முதலில் ரிமண்ட் செய்த நீதி மன்றம் சரியாக விசாரிக்காமல் (போலீஸ் அவர்களை தாக்கினார்களா , ஏதாவது காயம் உள்ளதா என்று பார்க்க வேண்டும் ) ரிமாண்ட் செய்தது , கிளை சிறையில் நல்ல முறையில் சேர்க்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று பதிவ இருக்கும் இப்பொது காவல் துறை, நீதி மன்றம், சிறை துறை மூன்றும் வருகிறது . ஒருவருக்கொருவர் கை கழுவ முயற்சி நடக்கும். judicial enquiry தங்கள் மீதும், கிளை சிறை நிர்வாகத்தின் மீதும் பழி போட முன் வராது. போலீஸ் 19 ம் தேதி கைது செய்து 20 ம் தேதி (24 மணி நேரத்திற்குள்} நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டோம் என்று தப்பித்து கொள்வர் . கடையை திறந்து வைத்திருந்தது மட்டும் காரணமல்ல வேறு எதோ motive உள்ளது . போலீஸ் தாக்கப்பட்ட தாக கூறப்படுகிறது . அதன் வெளிப்பாடு இப்படி ஒரு தாக்குதல் நடந்துள்ளது . .உண்மை வெளி வர வேண்டும்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
25-ஜூன்-202020:00:45 IST Report Abuse
J.Isaac நாட்டில் நடக்கிற அயோக்கியத்தனத்தை பார்த்தால் கொரனோ ஒழிய வழியில்லை போல தெரிகிறது.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
25-ஜூன்-202018:48:35 IST Report Abuse
Raj பொம்பள பொருக்கி காசிய அடிக்காது இந்த போலீஸ். அங்கேய் காசு வாங்கிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X