விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்ல டிஜிபி தடை| Tamil Nadu DGP issues new arrest and remand guidelines amid Covid-19 spread | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்ல டிஜிபி தடை

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (20)
Share
டிஜிபி, திரிபாதி, போலீஸ், சுற்றறிக்கை, விசாரணை கைதிகள்,  கொரோனா, பரிசோதனை, Tamil Nadu DGP, arrest, remand, guidelines, Covid-19 spread, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu

சென்னை: விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று விசாரிக்காமல், தடுப்பு மையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் போலீசாருக்கும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளத்தில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், இரண்டு எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விசாரணை கைதிகளை காவலில் விசாரிக்கும் போது போலீசார் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். விசாரணை காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா கண்டறியப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று விசாரணை செய்ய கூடாது. தடுப்பு காவல் மையங்களுக்கு அழைத்து சென்றே விசாரணை நடத்த வேண்டும்.


latest tamil news


ஜாமினில் வரும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை உடனடியாக போலீஸ் ஜாமின் தர வேண்டும். ஜாமினில் வர முடியாத விசாரணை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையுடன், கொரோனா பரிசோதனை செய்வது அவசியம். கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த தனிக்கட்டடம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X