சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டையில் நடந்த வெவ்வேறு விபத்தில், மூன்று பேர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஜிஞ்சம்பட்டியை சேர்ந்தவர் நவீன்குமார், 20; கர்நாடகா மாநிலம், பீன்யாவில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், ஜிஞ்சம்பட்டியில் நடந்த, பள்ளி தோழியின் திருமணத்தில் பங்கேற்று விட்டு, மீண்டும் பெங்களூரு நோக்கி நேற்று ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் சென்றார். அவருடன் பெங்களூரு பீன்யா பகுதியை சேர்ந்த ஷாகீர், 21, உடன் சென்றார். கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளியில், பகல், 12:15 மணிக்கு, முன்னால் சென்ற டிராக்டர் மீது மொபட் மோதியது. இதில், நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ஷாகீரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியில், அவர் உயிரிழந்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், தேன்கனிக்கோட்டை அடுத்த டி.பாரந்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 65; இவர் நேற்று மதியம், 2:30 மணிக்கு, தேன்கனிக்கோட்டை - பாலதொட்டனப்பள்ளி சாலையில் உள்ள தின்னூர் பகுதியில், பைக்கில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு பைக், கிருஷ்ணப்பா பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X