பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள மீனாட்சி நகரை சேர்ந்த, 42 வயது ஆண் மற்றும் பஸ்தி அன்பு நகரை சேர்ந்த, 44 வயது ஆண் ஆகிய இருவர், ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், அலுவலக பணி காரணமாக, அடிக்கடி பெங்களூரு சென்று திரும்பினர். இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு, கொரோனா பாதிப்பு உறுதியானது. அதேபோல், ஓசூர் காந்தி நகரை சேர்ந்த, 43 வயது ஆண், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். அவர், தினமும் பணிக்கு சென்று திரும்பிய நிலையில், அவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று தனியார் நிறுவன ஊழியர்களும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X