கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிய மேலும் ஒரு ஆய்வகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிய மேலும் ஒரு ஆய்வகம்

Added : ஜூன் 25, 2020
Share

கிருஷ்ணகிரி: கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிய, மேலும் ஒரு ஆய்வகம் கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய புதிய ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு, நேற்று செயல்பாட்டிற்கு வந்தது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறுகையில், ''கொரோனா பரிசோதனைக்கு மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்படும் சளி மற்றும் ரத்த மாதிரிகளை, ஓசூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி முடிவுகள் பெறப்பட்டன. முடிவுகளை விரைந்து அறிய, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மேலும் ஒரு ஆய்வுக்கூடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், விரைந்து பரிசோதனை முடிவுகளை அறியலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள ஆய்வகங்களை பயன்படுத்தி கொள்ளலாம்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X