பொது செய்தி

தமிழ்நாடு

சின்னத்திரை நடிகருக்கு அ.தி.மு.க., நிவாரண உதவி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஓசூர்: அஞ்செட்டி அருகே, வறுமையின் பிடியில் சிக்கிய, சின்னத்திரை காமெடி நடிகருக்கு, அ.தி.மு.க., சார்பில் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, ஆலமரத்து கொட்டாய் மலை கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன், 27. மாற்றுத்திறனாளி; சென்னை லயோலா கல்லூரியில், எம்.ஏ., மீடியா படித்து வரும் அவர், படிப்புக்கு இடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், காமெடி நடிகராக நடித்து, மக்களை சிரிக்க வைக்கிறார்; இவரது தந்தை பச்சையப்பன், 67, கடந்த, 11 ஆண்டுகளாக மனநோயாளியாக உள்ளார். தாய் மாதம்மா, 58, விபத்தொன்றில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, நடக்க முடியாமல் உள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து, தன் குடும்பத்தை காப்பாற்றி வந்த பரந்தாமன், தற்போது வருமானமின்றி தவிக்கிறார். இது தொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதைப்பார்த்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், பரந்தாமன் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார். அப்போது, வீடு கட்டித்தர வேண்டும் என்ற, பரந்தாமனின் கோரிக்கைக்கு ஏற்பாடு செய்வதாக, அவர் உறுதி அளித்தார். பரந்தாமன் நிருபர்களிடம் கூறுகையில், ''தன் படிப்புக்கு ஏற்ற பணியை, அரசு வழங்க வேண்டும்,'' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். நிகழ்ச்சியில், ஓசூர், நகராட்சி முன்னாள் தலைவர் ராமு, ஓசூர் நகர துணை செயலாளர் மதன், மாவட்ட பிரதிநிதி சிட்டி ஜெகதீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X