பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் காணொலி மூலம் ஆய்வுக்கூட்டம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் இரண்டாம் கட்டமாக, காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கிருஷ்ணகிரி மாவட்ட, கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ், இரண்டாம் கட்டமாக காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கலெக்டர் பிரபாகர், எஸ்.பி., பண்டிகங்காதர், டி.ஆர்.ஓ., சாந்தி, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் முத்துசெல்வன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிறப்பு அதிகாரி பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதோடு, நாள்தோறும் தூய்மைப்பணிகள் மேற்கொண்டு மருத்துவக் குழுக்கள் மூலம், ஆலோசனை வழங்க வேண்டும். வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் தொடர்பு எண்கள் மற்றும் விபரங்களை உடனடியாக கிராம அளவிலான குழுக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களை வீட்டில் தனிமைப் படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்களை, ஏழு நாட்கள் முகாம்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். தொற்று உள்ள நபர்களை கண்டறியும் பட்சத்தில், அவர்களையும், அவர்கள் சார்ந்தவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X