பொது செய்தி

தமிழ்நாடு

கறுப்பு பேட்ஜ் அணிந்து வருவாய்த்துறையினர் பணி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து, பணியில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த, திருச்சி மாவட்ட, ஆர்.ஐ., சேகர் குடும்பத்துக்கு, நிவாரணத்தொகையாக, 50 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும், 150க்கும் மேற்பட்ட துணை கலெக்டர் நிலையிலான வருவாய் கோட்ட அலுவலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதால், கொரோனா நோய் தடுப்பு பணிகளில் கூட பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, துணை கலெக்டர் நிலையில் உள்ள அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஒருங்கிணைந்த பணி முதுநிலை செய்வது தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்பின் பெயரிலான அரசாணையை, காலதாமதமின்றி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை, வருவாய்த்துறையினர் அரசிடம் வலியுறுத்தி வருகினறனர். ஆனால், அரசு கண்டுகொள்ளாததால், கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், மூன்று நாட்களுக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என, முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும், தாசில்தார், ஆர்.ஐ., அலுவலக உதவியாளர் என மொத்தம், 371 பேர், நேற்று முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து, பணியில் ஈடுட்டனர்.* கொரோனா பணியின் போது இறந்த, வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்துக்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தாசில்தார் சரவணன் தலைமை வகித்தார். இதில், நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள், நேற்று கறுப்பு பேட்ஜ் அணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X