பொது செய்தி

தமிழ்நாடு

உயர் கல்வித்துறை அமைச்சரின் பி.ஏ.,வுக்கு கொரோனா பாதிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

தர்மபுரி: தமிழக, உயர் கல்வித்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளருக்கு, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனின் நேர்முக உதவியாளராக, தர்மபுரியை சேர்ந்த, 45 வயதான தாசில்தார் பணியாற்றி வருகிறார். அவர், தர்மபுரி மாவட்டத்தில், அமைச்சரின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைப்பு செய்து வந்தார். அவருக்கு கடந்த, இரு நாட்களுக்கு முன், உடல்நலம் பாதித்தது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர், உடல் நல பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது. இரண்டாம் கட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினர் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு மையத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X