பொது செய்தி

தமிழ்நாடு

நான்கில் ஒரு பங்கு பாடங்கள் குறைக்க வாய்ப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கோபி: ''கொரோனா பாதிப்பால், பள்ளி மாணவர்களுக்கு நான்கில் ஒரு பங்கு பாடங்கள் குறைக்க வாய்ப்புகள் உள்ளன,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபியில், அ.தி.மு.க., சார்பில், 700 பேருக்கு அமைச்சர் செங்கோட்டையன், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒன்று முதல், பிளஸ் 2 வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, ஜூன், 30க்குள் பாடப்புத்தகங்கள் கொண்டு சேர்க்கப்படும். கொரோனா சூழலில், நடப்பு கல்வியாண்டில், பள்ளி வேலை நாட்கள் குறைவாகவே உள்ளது. எனவே, கடந்தாண்டு செயல்படுத்திய பாடத்திட்டத்தில், சில பாடங்களை குறைக்க, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான பாடங்களை மட்டும் போதிக்கும் வகையில், பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது. முதல்வரின் ஒப்புதலுக்கு பின், பாடத்திட்டங்களை வெளியிட உள்ளோம். அதன்பின், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். கல்வி தொலைக்காட்சி மூலம் போதிக்க, வகுப்பு வாரியாக நேரம் வகுக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில், நான்கில் ஒரு பங்கு பாடங்கள், குழு அளிக்கும் முடிவுகள் மூலம், குறைக்கும் வாய்ப்பு உள்ளது. முதல்வருடன் கலந்து பேசி, பாடத்திட்டம் குறித்து, எவரும் குறை சொல்லாத வகையில், மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ஜூலை முதல் வாரத்தில், பிளஸ் 2 வகுப்புக்கு தேர்ச்சி முடிவுகள் அறிவிக்க, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தமிழகத்தில் இன்று வரை, மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ கொரோனா தொற்று ஏற்படவில்லை. ஆனால், கொரோனா தொற்றுக்கு ஆளான, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் மட்டும் குணமாகி, 14 நாட்களுக்கு பின் சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X