சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் தீவிர விசாரணை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூரில், கார் டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், இரு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் கலாம் பாஷா, 42. கார் டிரைவர்; இவரது தந்தை அக்பர் பாஷா, வீட்டின் அருகே மளிகைக்கடை நடத்தி வருகிறார்; நேற்று முன்தினம் இரவு, 9:15 மணிக்கு, கலாம்பாஷா, அவரது தந்தை அக்பர்பாஷா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த, 30 வயது மதிக்கத்தக்க இருவர், வீட்டின் மீது மதுபாட்டில்களை வீசினர். அதை கலாம்பாஷா தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள், தங்களிடமிருந்த பெட்ரோல் குண்டுகளை, அவரது வீட்டின் மீது வீசினர். இதில், வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவை தீப்பிடித்தன. அவை உடனடியாக அணைக்கப்பட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. வாலிபர்கள் தங்களிடமிருந்த கத்தியால், கலாம் பாஷாவின் தலையில் தாக்கியதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோர், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், கொள்ளையடிக்க சென்ற வாலிபர்கள், காலாம்பாஷாவிடம் ஏற்பட்ட தகராறால், அவரை தாக்கி விட்டு தப்பியது தெரிந்தது. கலாம்பாஷா புகாரின்படி, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X