பொது செய்தி

இந்தியா

ஏர் இந்தியாவுக்கு எமிரேட்ஸ் புதிய கட்டுப்பாடு

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Air India, Vande Bharat, UAE, Flights, No Entry, Passengers, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, ஏர் இந்தியா, விமானம், வந்தே பாரத், அரபு எமிரேட்ஸ்,

புதுடில்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானத்தில் வரும் இந்தியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் முயற்சியாக ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இநநிலையில், அமெரிக்காவுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமான ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, 'விமானங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிகளை சிறப்பு விமானங்களில் அனுப்புவது அனுமதிக்கப்பட மாட்டாது. இந்தியாவை சேர்ந்த அனைத்து பயணிகளும் உரிய வசிப்பிட அனுமதி அல்லது பணி அனுமதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் அல்லது துபாயின் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான இயக்குநரகத்தின் ஒப்புதல் பெற்றிருந்தாலும்,
தற்போது டில்லியில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் மற்றும் எமிரேட்ஸில் உள்ள வெளிநாட்டினர் விவகாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் சிறப்பு அனுமதியை பெற்றால் மட்டுமே வந்தே பாரத் திட்டத்தின் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்' என கூறப்பட்டுள்ளது.


latest tamil news


கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி தன்னுடைய எல்லைகளை மூடிய துபாய், வரும் ஜூலை 7ம் தேதி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது. அனைத்து சுற்றுலா பயணிகளும் கொரோனா தொற்று இல்லை என்பதற்காக சான்றிதழை பெற்று வர வேண்டும் அல்லது வருகையின்போது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fardhikan - Rajakambeeram,இந்தியா
25-ஜூன்-202017:10:41 IST Report Abuse
Fardhikan தவறான தகவல்
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-ஜூன்-202016:23:43 IST Report Abuse
மலரின் மகள் வந்தே பாரத் திட்டத்தின் நோக்கம் என்ன. தாயகம் திரும்ப விழைவோரை, விமான இயக்கங்கள் இல்லாதததால் தவிப்போரை தாயகம் அழைத்து வருவது தானே. நிறைய பேரு இருக்கிறார்கள். அதற்காக நிறைய விமானங்களை வெளிநாட்டு விமானங்களையும் இயக்க சிறப்பு விதிகளின் கீழ் அனுமதித்து மிஷன் வெற்றி பெற செய்யவேண்டும். இவர்களின் நோக்கம் அப்படி தெரியவில்லை. எதோ ஆதரவற்றவர்கள் உணவிற்கு உறையுள்ளுக்கு திண்டாடுவோரை மீட்பதாதாக வெளியில் சொல்லி கொண்டு விமான பயண டிக்கெட்களை இரண்டு முதல் மூன்று மடங்கு ஆக்கி இருக்கிறார்கள் எதோ லாட்டரி டிக்கெட்டில் அதிர்ஷ்டம் இருக்கவேண்டும் என்பது போல வெகு சில சாமானியர்களுக்கு அதிர்ஷ்டம். நிரைய பேரு கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறது மோடி அரசு என்பதை உள்நாட்டில் இப்போது தெரியவில்லையென்றாலும் கொஞ்சம் நாட்களில் அது புரிய வரும். வெளிநாட்டில் வாசிக்கும் எந்த இந்தியர்களை வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள் அவர்களின் எரிச்சல் அல்லது கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்று. தேர்தல் வெகு தொலைவில் இருக்கிறது என்று ஒரு இறுமாப்பு கொண்டிருக்கிறார்கள் என்று தான் பலர் சொல்கிறார்கள். இறைவன் மிகப்பெரியவன் என்பதை உணராதவர்கள். மக்களின் சாபத்திற்கும் எரிச்சலுக்கும் உள்ளான அந்த அரசாலும் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது செய்யவே முடியாது. எவ்வளவு முயன்றாலும் தோல்வியில் தான் முடியும். நமது ஜோசியத்தில் பரிகாரம் செய்வதையும் ஏற்கனவே குடும்பத்தில் யாராவது ஒருவரின் முன்னோர்களின் கோபத்திற்கு அல்லது சாபத்திற்கு உள்ளானதால் தான் எவ்வளவு முயன்றும் சில பிரச்சினைகள் தீரவே மாட்டேனென்கிறது என்று சொல்வதற்கு பரிகார பூஜை மற்றும் சமாதான பூஜைகள் செய்து மனதை குளிர்விப்பார்கள். அதுபோல மக்களின் கோபத்திற்கும் எரிச்சலுக்கும் சாபத்திற்கு உள்ளாகிய அரசுகளால் என்ன செய்தாலும் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பது இப்போது திண்ணியமாக தெரிகிறது பாருங்கள். நாங்கள் பாதிக்கப்ட்டோமென்று சொல்வதற்கில்லை, பொதுவாக அனைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காகவும் அவர்கள் படும் அல்லல்களை நேரடியாக உணர்வதாலும் தாயகத்திலுள்ளோரின் மனநிலை நன்கு அறிந்தாலும் அரசிற்கு நல்லதை சொல்வதற்காகவே தொடர்ந்து எழுதி வருகிறேன். நிறைய பேர் இதை தவறாக புடித்து கொள்ளலாம். உண்மை அது அல்ல. அரசு செய்வதில் பல குறைகள் இருக்கின்றன. மக்களை எது எதுவெல்லாம் வருத்துகிறது என்று அறிந்து அதை தீர்க்கவோ அல்லது விளக்ககங்களை தெளிவாக சொல்லி சமாதானமோ செய்ய வேண்டும். இவர்கள் எரியும் வீட்டில் முடிந்த மட்டும் பிடுங்கி கொள்ளலாம் எனபதை போல அழக்கொண்ட எல்லாம் அழைக்கிறார்கள். அதனால் தான் எடுத்த அனைத்து காரியங்களிலும் பெரியளவில் வெற்றி பெற்றதாக காட்டி கொள்ள முயன்றாலும் தொடர் தோல்விகள் வரிசையாக இருக்கின்றன தொடர்கின்றன, புரிந்து கொள்ளாத அரசாள்வோரால் மக்களுக்கு அதிக சிரமங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது பாருங்கள். அரசுக்கு அனைவரும் தான் சொல்லி புரியவைக்க வேண்டும். இப்போதைய எண்ணம் இந்த மத்திய மாநில அரசுகள் போனால் நல்லது. யார் வேண்டுமானாலும் வந்து விட்டு போகட்டும் துக்ளக் ஆட்சி கூட இருந்து விட்டு போகட்டும், இவர்கள் வெளியேறி புதிய அரசு வரவேண்டும். அல்லது குறைந்த பட்சம் தலைமை மாறவேண்டும். அப்போது தான் நமது பாரத அன்னையின் கோபம் தணியும். ஆட்சி தவறானால் இயற்கையின் கோபம் பெரிதென்று கொட்டு முரசே என்று முன்னோர்கள் பாடியிருக்கிறார்களாமே? வந்தே மாதரம்.
Rate this:
Cancel
25-ஜூன்-202016:20:31 IST Report Abuse
ஆப்பு இந்த சமயத்தில் துபாய்க்கு சுற்றுலா செல்லும் கொரொனா மூடர்கள் இருக்காங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X