பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடாக உருவெடுக்கும் மதுரை பரவை மார்க்கெட்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Madurai, Paravai Market, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, Corona Cases, Spread, மதுரை, பரவை மார்க்கெட், கொரோனா, வைரஸ், பரவல், பாதிப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை போல, மதுரையில் பரவை மார்க்கெட் கொரோனா பரவல் மையமாக உருவெடுத்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு பெரிதும் காரணமான கோயம்பேடு மார்க்கெட் தொடர்பில் உள்ளவர்களாலேயே அதிகளவு பரவியது.
மஹாராஷ்ட்டிராவில் இருந்து பல்லாரி, உருளைக்கிழங்கு லோடு ஏற்றி பல லாரிகள் மதுரை, சென்னை வந்துள்ளன. இதில் வந்த டிரைவர்கள், அங்குள்ள சில லோடுமேன்கள் மூலம் கொரோனா பரவி இருப்பதாக கூறப்படுகிறது. ஏனனெில் இந்தியாவில் அதிகம் பாதிப்பு கொண்ட முதல் மாநிலம் மஹாராஷ்ட்டிரா ஆகும். இங்கு ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மதுரையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 157 பேர், 138 பேர், 97 பேர் என பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது. இதற்கு பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் முக்கிய காரணமாக திகழ்கிறது.


latest tamil newsஅங்கு வியாபாரிகள், லோடுமேன்கள், விவசாயிகள் என தினமும் பல நூறு பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஜூன் 15 முதல் மூடப்பட்ட பரவை மார்க்கெட், 4 இடங்களில் கடைகள் செயல்பட்டு வந்தன. சமீபத்தில் மதுரையில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலோனோர் பரவை மார்க்கெட் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டதால், மார்க்கெட்டில் பணியாற்றி வரும் அனைவரையும் சோதனையிட கலெக்டர் வினய் உத்தரவிட்டார். அதன்படி, ஏற்கனவே 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1009 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 25 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.


latest tamil newsஅவர்கள் அனைவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை மதுரை காமராஜர் பல்கலை.,யில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமை மையத்திற்கு அழைத்து வர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பரவை மார்க்கெட்டில் பணியாற்றியவர்களுடன் அடுத்தடுத்து தொடர்பில் இருந்தவர்கள் என 2000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
25-ஜூன்-202017:18:05 IST Report Abuse
S. Narayanan சென்னையை போலவே கொரோனா தன் கைவரிசையை விரைவில் காட்டும்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
25-ஜூன்-202014:16:32 IST Report Abuse
siriyaar குவார்ட்டர் கடையை திறந்து உடனே எடப்பாடிக்கும் மோடிக்கும் ஏழரை ஆரம்பம் ஆனது.
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
25-ஜூன்-202013:12:48 IST Report Abuse
svs கோயம்பேடு மார்க்கெட் எனபதே ஊழல். ஊழல் அரசியல் காரணங்களுக்காக செயல்பட்டு காரோண பரவியது. இங்குள்ள மக்களுக்கு சுத்தம் சுகாதாரம் பற்றியும் அக்கறை கிடையாது. கோயம்பேட்டில் உள்ள பயோ காஸ் தொழிற்சாலை பல ஆண்டுகளாக செயல் பாட்டில் கிடையாது. பல கோடி மூலதானம் பாழ்பட்டது. இப்போது காரோண பரவை மார்க்கெட்டில் இருந்து பரவ ஆரம்பித்துள்ளது. கோயம்பேடு பாடம் இன்னும் படிக்கவில்லை. இதே கேரளாவை பாருங்கள். அங்குள்ள மருத்துவ கழிவை தமிழ் நாட்டில் கொட்டி கேரளா சேட்டன்கள் சுதாரிப்புடன் உள்ளார்கள். இங்குள்ளவனுக்கு காரோண மரண பயம்தான் மிச்சம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X