சென்னையில் மண்டலவாரி கொரோனா பாதிப்பு; ராயபுரத்தில் 7 ஆயிரத்தை நெருங்கியது| Coronavirus cases in Royapuram cross 7,000-mark | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மண்டலவாரி கொரோனா பாதிப்பு; ராயபுரத்தில் 7 ஆயிரத்தை நெருங்கியது

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
சென்னை, கொரோனா, மண்டலவாரியாக, ராயபுரம், பாதிப்பு, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, royapuram

சென்னை: ராயபுரம் மண்டலத்தில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேநேரத்தில் அங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,171 ஆனது.

சென்னையில், நேற்றுடன் (ஜூன் 24), 45 ஆயிரத்து, 814 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்று கண்டறியும் விகிதம் உயர்ந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில், 26 ஆயிரத்து, 472 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது, 58.18 சதவீதமாகும். தவிர, 18 ஆயிரத்து, 673 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். எதிர்பாராத விதமாக, 668 பேர் (1.47 சதவீதம்) பலியாகியுள்ளனர்.


latest tamil news


மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக ராயபுரத்தில், 6,837 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 4,171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 114 பேர் பலியாகியுள்ளனர், தற்போது 2552 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைந்தபட்சமாக மணலியில் 718 பேர் பாதிக்கப்பட்டு, 347 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


சென்னையில் மண்டல வாரியாக பாதிப்பு விவரம்


ராயபுரம் - 6,837
தண்டையார்பேட்டை - 5,531
தேனாம்பேட்டை - 5,316
அண்ணா நகர் - 4,922
கோடம்பாக்கம் - 4,908
திரு.வி.க.நகர் - 3,896
அடையாறு - 2,777
வளசரவாக்கம் - 1,957
திருவொற்றியூர் - 1,755
அம்பத்தூர் - 1,741
மாதவரம் - 1,383
ஆலந்தூர் - 1,124
பெருங்குடி - 916
சோழிங்கநல்லூர் - 894
மணலி - 718

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X