சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு: பிரபல இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
திருநெல்வேலி, அல்வாகடை, உரிமையாளர், கொரோனா, பாதிப்பு, தற்கொலை, Iruttu Kadai alwa store, owner, Hari Singh, death, Tirunelveli, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருக்கும் பிரபல இருட்டுக் கடை அல்வா உரிமையாளருக்கு கொரோனா உறுதியான நிலையில், மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 24) வரை 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலியில் டவுன் நெல்லையப்பர் கோயில் எதிரே உள்ள புகழ் பெற்ற இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங். இவருக்கு கடந்த 3 நாளுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உறுதியானது.
இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற சுகாதார அதிகாரிகள், கிருமி நாசினி மருந்து தெளித்தனர். இது தொடர்பாக, உறவினர்கள், ஹரிசிங்கை தொடர்பு கொண்டு விசாரித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையிலேயே ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மருமகன் கோபால் சிங்கிற்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 3 ஆண்டுகள் பயிலும் செவிலியர் பயிற்சி பள்ளி உள்ளது. முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு தொற்று உறுதியானதால் பயிற்சி பள்ளி மூடப்பட்டது. மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீசுக்கு கொரொனா தொற்று உறுதியானது. இதனால் காவல் நிலையம் மூடப்பட்டு, அதனை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-202005:15:16 IST Report Abuse
தல புராணம் //மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.// எங்கேயோ உறுத்தலாக உள்ளது.. சாத்தன்குளம் பற்றி ஏதாவது தகவல் இவருக்கு தெரிந்திருந்ததா ?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-202005:13:49 IST Report Abuse
தல புராணம் தினமும் பொய் சொல்லி கோடானு கோடி மக்களுக்கு அல்வா கொடுக்கும் அரசியல்வியாதிகள் எத்தனை பேர் இன்னமும் இருக்கும் போது சுவையான அல்வாவை லட்சோபலட்சம் பேருக்கு கொடுத்த நீங்கள் எதற்கு இந்த விபரீத முடிவை எடுத்தீர்கள்? உங்கள் வியாபாரத்தில் ஒரு போட்டி வந்தால் மாண்டு விடுவீர்களா? போராடி முதல் இடத்தை பிடிக்கமாட்டீர்களா? இவ்வளவு நாளும் அதைத்தானே செய்தீர்கள்.. உங்களிடம் இல்லாத பணவசதியா? அதான் நாளுக்கொரு மருந்து வருகிறதே. போராடிப் பார்த்திட வேண்டாமா ? கடைசியில் தவறான உதாரணமாக போய் விட்டீர்கள்.. RIP.
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
27-ஜூன்-202012:20:47 IST Report Abuse
Rajan தயவு செய்து இந்த முடிவை யாரும் எடுக்காதீர்கள் , கண்டிப்பாக காரோண பதிப்பில் இருந்து மீளலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X