தமிழ்நாடு

அடிக்கடி மாற்றப்படும் இன்ஸ்பெக்டர்கள்: பணிகள் பாதிப்பு; புகார்தாரர்கள் அவதி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். இதனால், கரூர், அரவக்குறிச்சியை சேர்ந்த புகார்தாரர்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர், குளித்தலையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. கரூர் இன்ஸ்பெக்டராக இருந்த சித்ரா தேவி, கடந்த மாதம் மேற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டார். கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கரூர் டவுன், வெள்ளியணை, வாங்கல், வெங்க மேடு, பசுபதிபாளையம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில், பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விசாரிக்கப்படுகிறது. ஏற்கனவே, இங்கு போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர். இன்ஸ்பெக்டர் இல்லாத நிலையில், பொறுப்பில் உள்ள எஸ்.ஐ.,க்கள், போலீசார் பாதுகாப்பு பணி, ஊரடங்கு உள்ளிட்ட வேறு பணிகளுக்கு அடிக்கடி சென்று விடுகின்றனர். இதனால், சில நாட்களில், ஸ்டேஷனில் ஒரு சில போலீசாரே பணியில் இருப்பர். இந்நிலையில், இன்ஸ்பெக்டர்களும் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். இதனால், புகார் கொடுக்க வரும் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், அரவக்குறிச்சி, தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரத்திலிருந்து, 25 முதல், 40 கிலோ மீட்டர் பயணித்து, கரூருக்கு புகார் கொடுக்க பெண்கள் வர வேண்டும். வரும் போது, வேறு பணி காரணமாக எஸ்.ஐ.,யும் ஸ்டேஷனில் இல்லாத நிலையில், புகார்தாரர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. சிலர் புகார் கொடுக்காமல் சென்று விடுகின்றனர்.

மூன்று ஆண்டுகளில் பல இன்ஸ்பெக்டர்கள்: கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, மூன்று ஆண்டுகளில், ராணி, பேபி, செல்வி, பழனியம்மாள், முனியம்மாள், சித்ரா தேவி ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக இருந்துள்ளனர். தற்போது, அம்சவேணி என்பவர் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர், அரவக்குறிச்சி ஆகிய, இரண்டு சப்-டிவிஷனுக்குட்பட்ட கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், அடிக்கடி இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்படுவதால், பணிகள் பாதிக்கப்படுவதாக போலீசார் புலம்புகின்றனர்.

ஆண் இன்ஸ்பெக்டர் பொறுப்பு: கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனின் பணிபுரியம் பெண் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்படும் போது, ஆண் இன்ஸ்பெக்டர்கள்தான், யாராவது ஒருவர் பொறுப்பு வகிக்கிறார். பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, அவர் எப்படி விசாரிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், புகார் கொடுக்க வரும் பெண்கள், ஆண் இன்ஸ்பெக்டரிடம் எப்படி வெளிப்படையாக பேச முடியும் என்ற சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்ட தலைநகரான கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை அடிக்கடி மாற்றப்படுவதை, தவிர்க்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X