நலவாரியங்களில் 68,134 பேர் பதிவு: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நலவாரியங்களில் 68,134 பேர் பதிவு: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

Added : ஜூன் 25, 2020
Share

கரூர்: ''மாவட்டத்தில், நல வாரியங்களில், 68 ஆயிரத்து, 134 பேர் பதிவு செய்துள்ளனர்,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, 489 பேருக்கு, முதற்கட்டமாக தலைக்கவசம், கையுறை, கண் கண்ணாடி, எதிரொளிப்பான் கொண்ட உடை, காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட, 55 ஆயிரத்து, 611 பேருக்கு தலா, 2,000 ரூபாய் வீதம், 11.12 கோடி ரூபாய் கொரோனா கால நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமானத் தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் 33 ஆயிரத்து, 411 பேருக்கு தலா, உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில், 31 ஆயிரத்து, 407 பேர், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில், 30 ஆயிரத்து, 677 பேர், தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில், 1,688 பேர், பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களாக, 4,362 பேர் என, 68 ஆயிரத்து, 134 பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு, அவர், பேசினார். எஸ்.பி.,பாண்டியராஜன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், எம்.எல்.ஏ., கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X