கரூர் நகரில் காற்றுடன் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் நகரில் காற்றுடன் மழை

Added : ஜூன் 25, 2020
Share

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழையும், கரூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில், மிதமான மழையும் பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணிக்கு கரூர் நகரம், திருமாநிலையூர், தான்தோன்றி மலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம், புலியூர், திருகாம்புலியூர், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன், கன மழை பெய்தது. அரைமணி நேரம் வரை தொடர்ந்து பெய்த மழை காரணமாக, கரூர் நகரில் பல இடங்களில் சாலைகளில், மழை நீர் ஓடியது. வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மக்கள் சென்றனர். குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X