காவிரியாற்று பாசன வாய்க்கால்களில் பாலம் கட்டும் பணிகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரியாற்று பாசன வாய்க்கால்களில் பாலம் கட்டும் பணிகள் தீவிரம்

Added : ஜூன் 25, 2020
Share
கரூர்: கரூர் அருகே, காவிரியாற்று பாசன வாய்க்கால்கள் மீது, பாலம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.கரூர் மாவட்டம், மாயனூர் காவிரியாற்றில் இருந்து, தென்கரை பாசன வாய்க்கால், கட்டளை மேட்டு பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. அந்த பகுதியில் உள்ள, பொது மக்கள் காவிரியாற்று கரையோர பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், மயானம் ஆகியவற்றுக்கு செல்ல கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன்,

கரூர்: கரூர் அருகே, காவிரியாற்று பாசன வாய்க்கால்கள் மீது, பாலம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கரூர் மாவட்டம், மாயனூர் காவிரியாற்றில் இருந்து, தென்கரை பாசன வாய்க்கால், கட்டளை மேட்டு பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. அந்த பகுதியில் உள்ள, பொது மக்கள் காவிரியாற்று கரையோர பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், மயானம் ஆகியவற்றுக்கு செல்ல கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், வாய்க்கால் மேல் பகுதியில், பாலங்கள் கட்டப்பட்டன. தற்போது, பழைய பாலங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலங்கள் கட்ட வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள், 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கின. இதையடுத்து, வளையார்பாளையம் தென்கரை பாசன வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வளையப்பாளையம், மகாதானபுரம் ஆகிய இடங்களிலும், கட்டளை மேட்டு வாய்க்கால், திருகாம்புலியூர் மற்றும் பிச்சம்பட்டி பகுதிகளில், வாய்க்கால் பாலம், நடைபாலம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், சிறுபாலம் மற்றும் நடைபாலம் கட்டும் பணி விரைவில் முடிவடையும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X