கறுப்பு பேட்ஜ் அணிந்து வருவாய் துறையினர் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கறுப்பு பேட்ஜ் அணிந்து வருவாய் துறையினர் போராட்டம்

Added : ஜூன் 25, 2020
Share

கரூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். கொரோனா பணியில் இறந்த வருவாய் துறை அலுவலர்களுக்கு, அரசு அறிவித்த, 50 லட்ச ரூபாயை வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும், காலியாக உள்ள துணை கலெக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய் துறை அலுவலர்களின், முக்கிய கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என, மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கரூர் மாவட்டத்தில் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X