தமிழ்நாடு

குறுவை சாகுபடி பணி: வேலை உறுதி திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கரூர்: குறுவை சாகுபடி பணிக்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த, 2011க்கு பிறகு கடந்த, 12ல் சரியான நேரத்தில் குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, தண்ணீர் கடைமடை பகுதியான, நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு சென்றுள்ளது. இதையடுத்து, டெல்டா பாசன மாவட்டங்களில் உள்ள முக்கியமான, 17 பாசன வாய்க்கால்களில், நாளை முதல் படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால், வடிகால் வாய்க்கால்களிலும், தண்ணீர் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள், மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை கணக்கீடு செய்து, நெல் நாற்று விடும் பணியை துவக்கி விட்டனர். இந்நிலையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்களை, குறுவை சாகுபடி பணிக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில், தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கடந்த, மூன்று மாதங்களாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்களுக்கு வேலை இல்லை. தற்போது, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் நாற்று நடுதல், நிலத்தை உழவுக்கு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்களை, டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி பணிக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாத, வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு வேலையும், சம்பளமும் கிடைக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X