இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் பலி

Added : ஜூன் 25, 2020
Share

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த பெண் சாலையில் தவறி விழுந்து பலியானார். திருப்பூர் மாவட்டம், நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 24; தனியார் பனியன் கம்பனியில் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை, 3:20 மணியளவில் அவருடைய தாய் லட்சுமியை, 48, அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள சுக்ராம்பட்டிக்கு ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை, ஆண்டிபட்டிக்கோட்டை அருகே, பைக்கிலிருந்து லட்சுமி எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X