பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைபெறாத நிலையில் மாணவ, மாணவியருக்கான மதிப்பெண்களை கணக்கிடும் வகையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பதிவேடு உள்ளிட்டவை அரசு, தனியார் பள்ளி தலைமையாசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. அந்தப்பணியானது, நாமக்கல்லில், டிரினிடி மெட்ரிக் பள்ளியிலும், திருச்செங்கோட்டில், மகேந்திரா மெட்ரிக் பள்ளியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. இந்நிலையில் கொரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால், பணியில் ஈடுபட்டுள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், கபசுர குடிநீர் வழங்கினார். ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட பொறுப்பாளர் சத்தார்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X