பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் தர்ணா போராட்டம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

எருமபட்டி: எருமபட்டியில், உயர் மின் கோபுரத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, அதற்கான தொகையை உடனடியாக வழங்கக்கோரி தர்ணா போராட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து பெரம்பலூருக்கு உயர் மின் கோபுரம் எடுத்துச்செல்லும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பவர் கிரிட் சார்பில் உயரழுத்த மின் கோபுரங்கள் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்பட்டு வருகின்றன. எருமப்பட்டி ஒன்றியம் மாணிக்கவேலூர் பகுதியில், 10 உயர் மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் தங்களுடைய நிலங்களை வழங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு வழங்குவதாக மின்வாரிய பவர் கிரிட் நிறுவனம் தெரிவித்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காததால், நேற்று, விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி தலைமையிலான அலவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X